1 |
கருமாரியின் அருள்மாரி உலகெங்கும் நிறைந்து கொரொனாவின் கொடுந்தாண்டவத்தையும் வென்று மக்களைக் காக்கட்டும். உலகெங்கும் வேதனையும் பீதியும் பற்றி எரிகின்ற இன்றைய சூழலில் அன்னையின் குளிர்ந்த கருணை மழை வேண்டி குளிர்ந்த பொருட்களை பாட்டில் நிறைய வைத்துப் பாடியிருக்கிறேன். அன்னையின் அருள் உலகைக் காக்கட்டும். |
2 |
தளிர்தவழு தரளபனி குளிர்விழியின் தாயே |
3 |
களர்கிளறி உழுமழையின் கருமுகிலி மாயே |
4 |
வெளிர்மதிய நிறங்களென வதனமொளிர்ந்தாயே |
5 |
பழிபாவத் தடுமாற்றம் தடம் மாற்றுவாயே! |
6 |
துருவமுறை இம்பளிங்கில் வெருகு நடை போலே |
7 |
பெருங்கவலை வலைவிழுந்த தளர்மனதினாலே |
8 |
அருந்து முலை அருள்கிடைக்க அழும்மதலை நானே |
9 |
கருமாரி பெயரோதக் கருதாத நாயேன்! |
10 |
சுகந்த மிகுந்த கந்தமிழைக் கனகப் பதத்தாலே |
11 |
அகந்தை அற தகுந்த படி எனைமிதிக்கலாமே |
12 |
மிகுந்த புகழ் முருகப் படை வனப்பதியுன் ஊரே |
13 |
எளியேனுங் கடைத்தேற வழிகாட்டுவாயே! |
14 |
முத்தம் கவர்நடைப் புரவி கால் வடுத்த புக்கும் நற்றேர் வழுதி கொற்கை |
15 |
இதயம்தனில் இருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே |
16 |
அதிரும் கழல் பணிந்து |
17 |
அதிருங் கழல் பணிந்து உன் அடியேன் உன் |
18 |
அபயம் புகுவதென்று நிலைகாண |
19 |
இதயந் தனிலிருந்து கிருபையாகி |
20 |
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே! |
21 |
எதிர் அங்கொருவர் இன்றி நடமாடும் |
22 |
இறைவன் தனது பங்கில் உமைபாலா |
23 |
பதி எங்கிலும் இருந்து விளையாடிப் |
24 |
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே! |
25 |
அதிருங் கழல்ப ணிந்து …… னடியேனுன் |
26 |
அபயம் புகுவ தென்று …… நிலைகாண |
27 |
இதயந் தனிலி ருந்து …… கிருபையாகி |
28 |
இடர்சங் கைகள்க லங்க …… அருள்வாயே |
29 |
எதிரங் கொருவ ரின்றி …… நடமாடும் |
30 |
இறைவன் தனது பங்கி …… லுமைபாலா |
31 |
பதியெங் கிலுமி ருந்து …… விளையாடிப் |
32 |
பலகுன் றிலும மர்ந்த …… பெருமாளே! |
33 |
1 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு |
34 |
2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப |
35 |
3 த்திரண்டாவது ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து |
36 |
4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ |
37 |
5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில் |
38 |
6 பெரிய திருமண்டப முன்[பி]லடுப்பு ஜீர் |
39 |
7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி |
40 |
8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா |
41 |
9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர் |
42 |
10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா |
43 |
11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா |
44 |
12 த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை |
45 |
13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ |
46 |
14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ |
47 |
15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு |
48 |
16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ |
49 |
17 நபயமாந அறங்காட்டி பிச்சரும் |
50 |
அனைத்து உலகங்களுக்கும் சக்கரவர்த்தியான ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவரின் நாற்பத்தியிரண்டாவது ஆட்சியாண்டில், ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்தில் எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதரசேகரதேவரின் திருமாளிகை முன்பு, பெரிய மண்டபம் ஜீர்நித்தமையால் (சிதைந்தமையால்) பிடவூரைச் சேர்ந்த வேளாளனான அரிகேசவனான கச்சிராஜன் இந்த மண்டபத்தை எடுப்பித்தார். அரிகேசவனான கச்சிராஜனுக்காக சோழநாட்டிலுள்ள (ஜயசிங்கன் குலத்தை அழித்தவரின் வளநாட்டைச் சேர்ந்த குளமங்கல நாட்டைச் சேர்ந்த) சாத்தமங்கலத்து பிடாரனான (சிவன்கோயில் பூசாரி) நாடறிபுகழன் இந்த வேலையை விரதங்கொண்டு மேற்கொண்டார். அவரோடு இவ்வூர் பிடாரர்களில் ராஜேந்திரசோழன் உதையநாயகனான ஈசான சிவரும் தேவன் அபயம் ஆன அறங்காட்டி பிச்சரும் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர். |
51 |
அதாவது சிவபாதசேகரமங்கலத்தில் (இன்றைய உடையாளூரில்) இராசராசனின் திருமாளிகை ஒன்றிருந்திருக்கிறது. அதன் முன்பிருந்த மண்டபம் விழுந்துவிட்டபடியால் பிடவூரைச் சேர்ந்த வேளாளன் அரிகேசவன் என்னும் கச்சிராஜன் எடுத்துக் கட்டுகிறான். அதாவது அவன் பொருள் அளிப்பவன். அவன் கொடுத்த பொருட்களைக் கொண்டு சாத்தமங்கலத்தைச் சேர்ந்த பிடாரன் நாடறிபுகழனும், சிவபாதசேகரமங்கலத்து உள்ளூர் பிடாடர்களான ஈசான சிவரும் அறங்காட்டி பிச்சரும் மண்டபத்தை எடுத்துக் கட்டுகிறார்கள். |
52 |
சேரநாட்டின் வட எல்லைதான் வஞ்சி(கரூர்) |
53 |
கரூரை சேர சோழ பாண்டிய நாட்டின் முக்கூடல்னு சொல்லலாம் |
54 |
ஆன்பொருநை ஆற்றக்கரையில் இருக்கும் ஊர் |
55 |
பொருநை -> தாமிரபரணி. ஆன்பொருநை -> அமராவதி. |
56 |
தான் தோன்றி மலைன்னு பெயர்க்காரணம் |
57 |
தாமான் தோன்றி அந்த ஊரோட பேர். தாவுகின்ற மான் தோன்றும் ஊர். |
58 |
தாமான் தோன்றிக்கோன் |
59 |
மதியால் வித்தகனாகி |
60 |
மனதால் உத்தமனாகி |
61 |
முதல்ல வித்தகனாகி, பிறகு உத்தமனாகி, மனதில் இறைச்சிந்தனை பதிவாகி, ஜென்நிலையைக் கொடு! |
62 |
மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே! |
63 |
நிதியே நித்தியமே என் நினைவே நற்பொருளாயோய் கதியே சொற்பரவேளே |
64 |
என் செல்வமே! என்றைக்கும் நிலைத்திருக்கும் பொருளே! என் நினைவே! சிறந்ததில் எல்லாம் சிறந்த பெரும்பொருளே! என்னுடைய புகலிடமே! ஊர் புகழும் தலைவனே! |
65 |
கருவூரிற் பெருமாளே |
66 |
கருவூரில் இருக்கும் முருகப் பெருமாளே! |
67 |
ஆண்டவா! அறிவைக் கொடு. அந்த அறிவை வைத்து தவறு செய்யாமல் நல்லது மட்டும் செய்யும் உத்தமனாக்கு. உத்தமமான உள்ளத்தில் உன் நினைவைக் கொடு. அந்த நினைவினால் மேலான யோகநிலையில் என்னை நிலை நிறுத்து. ஆண்டவா! என் செல்வமும் நீ! என்றும் நிலைத்திருக்கும் அருளும் பொருளும் நீ! என் நினைவும் நீ! பேரின்பப் பொருளும் நீ! எனக்கு கதியும் நீ! உலகம் போற்றும் பெரும்பொருளும் நீ! |
68 |
மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி |
69 |
பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே |
70 |
நிதியே நித்தியமே என் நினைவே நற்பொருளாயோய் |
71 |
கதியே சொற்பரவேளே கருவூரிற் பெருமாளே |